நாமாக மாறினால்தான் விமோசனம்- இல்லையேல் மோட்சம் !  

திருந்துவோம்- இல்லையேல்   வருந்துவோம்!

அரசு விதித்திருக்கும் நடைமுறை கட்டுப்பாட்டு விதிமுறைகளைப்பின் பற்றினால் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பே இல்லை. கொரோனா கூடுகிறதென்றால் விதிமுறைகளை யாரும் முறையாகப் பின் பற்றவில்லை என்றுதானே அர்த்தம்!

கோப்பு படம்

எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே குறை கூறி, காலத்தை விரயமாக்காமல் அரசாங்கத்தின் நடைமுறைத்திட்டங்களை பின் பற்றினால் கொரோனா எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க முடியும்.

அரசாங்கத்தையே குறை கூறிக்கொண்டிருக்காமல் அதன் விதிமுறைகளை அனுசரித்தால்தான் அதிலுள்ள இடர்கள், நன்மைகள் என்ன வென்று புரியும்.

இன்றைய நிலையில் கோரோனா உருமாற்றம் அடைந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன். உருமாறிய கொரோனா 10 எண்ணிக்கையைக் கூட  எட்டவில்லை என்றாலும் இந்த எண்ணிக்கை உயராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. 

அப்படியே இந்த எண்ணிக்கை உயர்வை நோக்கி நகர்கிறதென்றால் அது மக்களின் கவனக்குறைவாலும் அலட்சியப் போக்குமே காரணமாக இருக்கும்! நடமாட்ட ஆணை மீறப்படுவதே எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம் என்பதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை.

நடமாட்டக் கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றவர்கள் எவ்விவித ஆட்சேபனையும் செய்வதில்லை. மீறுகின்றவர்களால்தான் தொற்றின் வீரியம் அதிகரிக்கின்றது. விபரீதம் கூடுகிறது.

கோப்பு படம்

நிலைமை இன்னும் மோசமானால் என்ன செய்யப்போகிறோம் என்ற ஒரு கேள்வியை  மனத்தில் இறுத்திக்கொண்டால் எல்லாவற்றிலும் தெளிவு பிறந்துவிடும்.  கட்டுப்பாடு இயல்பாகவே வந்துவிடும். 

விதிமுறைகளை  மீறுகின்றவர்களே வீண் வாதம் செய்கின்றனர். எல்லை தாண்டுகின்றவர்கள் முறையான காரணங்களால்  எல்லை தாண்ட முடியும். ஆனாலும் அவர்களால் கோரோனா பரவாது என்பதற்கு  என்ன உறுதி க்குற முடியும். 

கொரோனா கண்ணுக்குத்தெரியாத கொலைக்கருவி. அது எங்கிருந்து தாக்கும் என்றும் எவருக்கும் தெரியாது. உலவும் காற்றில் தவழ்ந்து வந்து தாக்குமாம். பிரபஞ்சமும் நம்மை காபாற்றாது.   

கொரோனா – மனிதர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்போவதுமில்லை. அது யாரை வேண்டுமாணாலும் தாக்கும். எந்த இடம் என்றெல்லாம் அதற்குத்தெரியாது. பொதுவில் கொரோனாவுக்கோ, அல்லது உருமாறிய கொரோனாவுக்கோ கண் தெரியாது என்பதுதான் உண்மை. அதனால்தான் அதன் தாக்கம் யார் என்றும் பார்ப்பதில்லை. 

ஆனால், மிருகங்கள் இதில் விதி விலக்காக இருக்கின்றன. இதையும் யோசிக்கலாம்!

கொரோனா பொறாமைப்படுவதில்லை. சிபாரிசுகளால் யாரையும் தாக்குவதில்லை. வசதி படைத்தவர்களிடம் மாமூல் பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் போகாது. பேரம் பேசி வசூல் செய்வதுமில்லை! வேண்டியவர்கள் என்று ஒதுங்குவதுமில்லை.

அதை தூரத்தே நிறுத்திவைக்கும் கட்டுப்பாடுகளைக்  கையாளுகின்றவர்களை  மட்டுமே  நெருங்க முடியால் ஒதுங்கி நிற்கும். கட்டுப்பாடுகள் என்பது என்ன?

அரசாங்கத்தின் சுகாதாரப்பிரிவு வரையறுத்திருக்கும் விதிமுறைகளை பின்பற்றினாலே போதும். கோரோனா தாக்கத்தை எட்டி வக்கலாம்.

கொரோனாவை அரசாங்கம் செய்யவில்லை. அது மக்களின் வழியே மக்களுக்குப் பரவிவிடுகிறது. அப்படியானால் அனைத்திற்கும் மக்கள்தான் காரணம் என்பது  மிகத் தெளிவாகத்தெரிகிறது. 

அப்படித்தெரிந்திருந்தும் திருந்த வேண்டியவர்கள் மக்களே அன்றி அரசாங்கம் அல்ல! விதிமுறைகள் மீறப்படுவதால் மட்டுமே தொற்ரு ஒட்டிக்கொள்கிறது.  அரசு சொல்வதை செவிசாய்த்தால்  வேண்டா கோரோனா நம்மை தீண்டா!  இதை அறிந்திருந்தும் அனைத்து தவற்றுக்கும் நாமே காரணமாக இருந்து கொண்டு அரசின் மீது அபாண்டம் சொல்வது அநாகரீகம் தானே!

நம்மால் முடியும் !உறவினர்களைப் பார்க்காமல் இருப்பதற்கும் அறவே பார்க்க முடியாமல் போவதற்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன. இந்த வேற்றுமை தெரிந்தும் தெரியாதுபோல் கண்களை மூடிக்கொண்டால் எப்படித்தான் எழுப்புவது.

இறப்பவர்களை சாலைகளில் , பொது வீதிகளில், திடல்களில் எரிக்கும் நிலைக்குக் கொண்டு செல்லாமல் கைகளைக் கழுவுங்கள், முகமூடியைத்தேர்ந்து பொருத்தமாக் அணியுங்கள் இடைவெளியை கடைப்பிடியுங்கள், மேலும் வீட்டிலேயே இருங்கள். 

மூச்சுவிட சிரமப்படுவதைவிட இது ஒன்றும் சிரமமில்லை!

 

  • எழுத்து:  கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here