மாணவிகளின் சமூகக் கடப்பாடு

 மரித்தவர்களுக்காக மயான சேவை 

நாட்டின் இக்கட்டான சூழலில் கல்விக்குத்தடை ஏற்பட்டு இயங்கலை கல்வியாக மாற்றமடைந்திருக்கிறது. ஆனாலும் மக்களுக்கு உதவுவதில் இயங்கலை என்ன செய்ய முடியும்?

நேர்முக உதவிதான் தேவை என்பதை உணர்ந்து அதை செயலில் காட்டத்துணிந்திருக்கின்றனர் கல்லூரி மாணவிகள். 

கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்களை மயானத்திற்குக் கொண்டு சென்று அடக்கம் செய்திடும் பணியில், மருத்துவ கல்லூரி, முதுகலை மாணவிகள் இருவர் இணைந்து சேவையாற்றி வருவது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், அப்பகுதியில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவினால் உயிரிழப்போரை மயானத்திற்குக் கொண்டு சென்று அடக்கம் செய்திடும் பணியில் பட்டப்படிப்பு பயிலும் மாணவி நிக்கோல், மருத்துவ கல்லூரி மாணவி டினா ஆகிய இருவரும், மயானத்திற்குக் கொண்டு வரப்படும் உடல்களை அடக்கம் செய்திடும் பணியில் தினமும் 5 மணி நேரத்திற்கு மேலாக சேவை உணர்வோடு தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

மாணவி நிக்கோலின் தந்தை கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன்காரணமாக தாங்களும் கொரோனா பணியில் தங்களை ஈடுப்படுத்திகொள்ள ஆர்வத்துடன் செயலில் இறங்கியுள்ளார்.

“கொரோனா போன்ற நோய் தொற்று காலத்தில் வீட்டில் வெறுமையாக உட்கார்ந்துகொண்டு இருப்பதைவிட மற்றவர்களுக்கு உதவுவது மகிழ்ச்சியைத் தருகிறது என்கிறார் அவர்.

ஆபத்து இல்லாத இடம் இல்லை என்று ஆகிவிட்டது. அதற்காக கொரோனா போன்ற நோய் தொற்று காலத்தில் அமைதியாக இருக்க முடியாது என்று இவ்விருவரும் கூறுகின்றனர்.

Advertisement:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here