அசல்போல் அசத்தும்  மெழுகுச்சிலை

சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியம்!

சில வேளைகளில் போலியானது அசலை மிஞ்சிவிடுகிறது.  தங்கம் என்ற நிஜம் மினுக்கும் போலிகளிடம் தோற்றுவிடுகிறது. ஆனால், இவை கலை என்று வரும்போது கைத்திறன் அசர வைத்திவிடுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மெழுகுச்சிலை அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

இப்படிசெய்வதற்கு அச்சு அசல் என்கிறார்கள். அச்சில் செய்வதை முன்பே தமிழன் கண்டுபிடித்ததால்தான் அச்சு என்பதில் செய்தால் அசல் போல் இருக்கும் என்றார்களோ!

இந்தவகையில் அச்சு செய்பவனே கைத்திறனாளி என்று ஒப்புக்கொளத்தான் வேண்டும்!

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மாபெரும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பதவியேற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள க்ரிவின் என்ற மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் அமெரிக்க அதிபரின் மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு இன்று முதல் வைக்கப்பட்டுள்ளது

இந்தச் சிலை, சிலை என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் ஜோபைடன் அவர்களே அங்கு நிற்பதைப் போன்று அச்சு அசலாக இருப்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

இந்தச் சிலையை வடிவமைத்த கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து  வருகின்றன.  இந்த அருங்காட்சியகத்தில் இந்திய பிரபலங்கள் உள்பட பல உலகப் பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூசி மெழுகினாலும் உண்மைபோல் இருப்பதே இச்சிலையின் சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here