சிங்கப்பூர்  பற்றிய வைரஸ் செய்தி

  சிக்கலில்  கெஜ்ரிவால்

சிங்கப்பூரில் புதிய திரிபு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்றும், வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையை ஏற்படுத்தக் கூடும் எனவும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், அதனால், இந்தியா சிங்கபூருக்கான சேவையை நிறுத்த வேண்டும் என கூறினார்.

மேலும் இந்த வைரஸ் பரவலை தடுக்க, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் கோரிக்கை விடுத்தார் .

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு கடுமையாக கண்டனங்களை பதிவு செய்துள்ள சிங்கப்பூர், கொரோனா திரிபு குறித்த ஆதாரம் எதுவும் இல்லாமல், பொறுப்பற்ற முறையில், பேசி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. 

இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் விமான சேவை எதுவும் இல்லை, வந்தே பாரத் மிஷனின் கீழ் இரு விமானங்கள் இயக்குகின்றன என இந்திய சிவில் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் இந்திய தூதரை அழைத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் “சிங்கப்பூர் திரிபுகுறித்த ட்வீட்டிற்கு தனது “வலுவான ஆட்சேபனை” தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here