– ராணி 2ஆம் எலிசபெத் மகிழ்ச்சி!
இளவரசி பீட்ரைசுக்கு குழந்தை பிறக்கிறபோது அந்தக் குழந்தை ராணி இரண்டாம் எலிசபெத்தின் 12- ஆவது கொள்ளுப்பேரக்குழந்தை என்ற அந்தஸ்தைப் பெறும்.
லண்டன்:
பீட்ரைஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் எட்வர்டோ மாபெல்லி மோஸ்சியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமாக உள்ளார்.
இது பற்றிய தகவல், நேற்று முன்தினம் அரச குடும்பத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமாக உள்ள தகவல் அறிந்து ராணி இரண்டாம் எலிசபெத் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துளளார் என்று கூறப்பட்டுள்ளது.








