பெட்டாலிங் இபிஎஃப் அலுவலகம் 24ஆம் தேதி முதல் செயல்படும்

பெட்டாலிங் ஜெயா: ஸ்ரீ பெட்டாலிங் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) அலுவலகம் திங்கள்கிழமை (மே 24) முதல் அதன் கவுண்டர் சேவைகளை மீண்டும் தொடங்கும்.

அதன் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் எந்தவொரு இபிஎஃப் கிளைக்கும் வருவதற்கு முன்பு, முதலில் வலைத்தளம் வழியாக ஒரு சந்திப்பை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

 அனைத்து  வாடிக்கையாளர்களும் வளாகத்திற்குள் நுழையும்போது நிலையான இயக்க நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கோவிட் -19இன் பரவலைக் கட்டுப்படுத்த எங்கள் பங்கை வகிக்கும் அதே வேளை,பொறுமை மற்றும் புரிதலுக்காக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக  என்று இபிஃஎப் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்று ஊழியர் ஒருவருக்கு உறுதி  செய்யப்பட்ட பின், கிருமிநாசினி மற்றும் சுத்திகரிப்பு செய்வதற்கும் மே 11 முதல் ஸ்ரீ பெட்டாலிங் கிளை மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here