குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் மயக்க நிலையில் இருந்த 1 வயது குழந்தை உயிரிழந்தார்

நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்ரீ செண்டாயனில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பாளரின் வீட்டிலிருந்து மயக்கமடைந்த நிலையில் இருந்த ஒரு வயது சிறுமி உயிரிழந்தார்.

அக்குழந்தையை அழைத்து செல்ல தாயார் வந்தபோது குழந்தை மயக்கமடைந்த நிலையில் இருந்ததாகவும் அதே நாளில் மாலை 6.26 மணியளவில் குழந்தையின் மரணம் குறித்த அறிக்கை கிடைத்ததாக சிரம்பான் காவல்துறைத் தலைவர் அசாஹர் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

தாய் தனது குழழந்தையை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு மருத்துவர் இருதய நுரையீரல் புத்துயிர் பெற (CPR) முயன்றார். ஆனால் பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார் என்று அவர் கூறினார்.

32 வயது குழந்தை பராமரிப்பாளரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய போலீசார் அவரைத் தடுத்து வைத்ததாகவும், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் அசாஹர் கூறினார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் குழந்தையில் இறப்பிற்கு காரணம் வயிற்றில் ஏற்பட்ட காயம் என சந்தேக்கிப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here