கொரோனா சாதாரண நோயாகிவிடுமாம்

-ஆய்வில் தகவல்!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அடுத்த 10 ஆண்டுகளில் சாதாரண சளி, காய்ச்சல் போல மாறிவிடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

திடீரென பரவிய கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்து போனது. அதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளும், வைரஸ் குறித்து ஆராய்ச்சிகளும் துரிதப்படுத்தப்பட்டன. அதன் விளைவாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் வைரஸ் குறித்து ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன. அதன் மூலம் கொரோனா வைரஸ் இன்னும் 10 ஆண்டுகளில் சாதாரண சளி, காய்ச்சல் போல மாறிவிடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் யூட்டா பல்கலைக் கழக கணிதம் மற்றும் உயிர் அறிவியல் துறை சார்பில் கொரோனா வைரஸ் தாக்கம் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என்று ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி மனித உடல் இன்னும் சில ஆண்டுகளில் கொரோனாவுக்கு எதிரான வலிமையைப் பெற்றுவிடும் என்று கண்டறிந்துள்ளனர்.

அடுத்த 10 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் உருவாக்கும் அதி தீவிர பாதிப்புகள் குறைந்துவிடும். இதற்கு மக்கள் மத்தியில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் காலங்களில் நோய்த் தொற்று அல்லது தடுப்பூசி போன்றவற்றால் கொரோனா வைரஸ் வீரியம் குறைந்துவிடும் என்றும், மிக மோசமான பாதிப்புகள் இருக்காது என்றும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் இந்த கணிப்பு தவறாகவும் வாய்ப்புள்ளது. இதற்கு புதிது புதிதாக மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் கிருமிகள் வருவது காரணமாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here