பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளந்தானில் ஒன்றுகூடிய சுமார் 1,000 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்

கோத்தா பாரு:

காசாவில் நடைபெறும் தாக்குதலுக்கு எதிராக, பாலஸ்தீனுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக நடத்தப்பட்ட நிதி சேகரிப்பு நிகழ்வில், கிளந்தான் முழுவதிலும் உள்ள 40 மோட்டார் சைக்கிள் கிளப்புகளில் இருந்து மொத்தம் 1,000 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இரு சக்கர சங்கம் (HIROUP) 1.0 மூலம் இன்று சுல்தான் முஹம்மது IV ஸ்டேடியத்தின் மைதானத்தில் ஒன்று கூடினர்.

குறித்த குழு காசா மக்களுக்கு நன்கொடைக்காக இரண்டு மணி நேரத்திற்குள் RM8,771 தொகையை திரட்டியது , பின்னர் அத்தொகை காக்னா பாலஸ்தீன் கிளந்தான் கிளையின் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலஸ்தீனத்தில் முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநிலம் முழுவதும் உள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஒற்றுமையின் அடையாளமாகவும் இந்தப் பேரணி அமைந்ததாக கிளந்தான் செராண்டா மோட்டார் கிளப் தலைவர் சுஹைஸ்லி சாலே கூறினார்.

ரைடர்ஸ் குழு வெறும் வாகனச் செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்வதில்லை என்பதையும், குறிப்பாக பாலஸ்தீனத்தில் நிகழும் தற்போதைய காசா பிரச்சினைகளுக்கு ஆதரவாக தமது ஒற்றுமையைக் காட்டுவது உட்பட எங்களுடைய சொந்தப் பணியும் உள்ளது என்பதையும் இந்தக் கூட்டம் நிரூபிக்கிறது.

“எங்கள் முயற்சிகள் அங்குள்ள சகோதரர்களுக்கு முடிந்தவரை உதவ முடியும் என்று நம்புகிறோம், மேலும் அவர்களுக்கான நிதி சேகரிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும், இதனால் அதிக நிதி சேகரிக்கப்பட்டு பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்படும்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here