புதிதாக கட்டப்பட்ட யுகேஎம் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை தற்காலிக கோவிட் -19 மருத்துவமனையாக மாற்றமா?

பெட்டாலிங் ஜெயா: யுனிவர்சிட்டி கெபாங்சன்  மலேசியா  சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை (HPKK UKM) ஒரு கோவிட் -19 மருத்துவமனையாக  உருவாக்கப்படலாம். இது தீவிர பராமரிப்பு பிரிவு (ஐ.சி.யூ) படுக்கைகள் இப்போது முழு கொள்ளளவிற்கு அப்பால் இயங்கி வரும் கிள்ளான் பள்ளத்தாக்கு மருத்துவமனைகளில் ஏற்படும் சிரமத்தை குறைக்க உதவும்.

ஐ.சி.யூ படுக்கைகள் தேவைப்படும் வகை 4 மற்றும் 5 கோவிட் -19 தொற்றின் திடீர் அதிகரிப்பைக் கையாள்வதற்கான ஒரு நடவடிக்கையாக, சுகாதார அமைச்சகம் மற்றும் யுனிவர்சிட்டி கெபாங்சான் மலேசியா (யுகேஎம்) ஆகியவற்றின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஹெச்பிகேகே யு.கே.எம். தற்காலிக கோவிட் -19 மருத்துவமனையாக மாற்ற பரிந்துரை செய்யப்படும் என்று  சுகாதார தலைமை இயக்குநர்  டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா சனிக்கிழமை (மே 22) முகநூலில் வெளியிட்டார்.

ஹெச்பிகேகே யு.கே.எம்  மருத்துவமனை  என்பது சென்சலர் துவாங்கு முஹ்ரிஸுக்கு அடுத்ததாக அமைந்துள்ள புதிதாக கட்டப்பட்ட கற்பித்தல் மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் 243 படுக்கைகள் உள்ளன. இதில் 28  ஐ.சி.யூ படுக்கைகள் உள்ளன. அவை தற்காலிக கோவிட் -19 மருத்துவமனையாக பயன்படுத்தப்படலாம். குறிப்பாக கடுமையான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறுகிறார்.

மருத்துவமனைகளில் சாதாரண வார்டுகளை தற்காலிக ஐ.சி.யுகளாக மாற்ற வேண்டும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் விளக்கினார். மோசமான நோயால் பாதிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளின் அதிகரிப்பு, கோவிட் -19 அல்லாத நோயாளிகளுக்கு தேவையான முக்கியமான கவனிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பைக் குறைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 16), டாக்டர் நூர் ஹிஷாம், மருத்துவமனைகள் சாதாரண வார்டுகளை தேவையான உபகரணங்களுடன் முழுமையான ஐ.சி.யுக்களாக மாற்ற முடியும் என்றாலும், முக்கியமான கோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்தால்  பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தும் என்றார்.

மலேசியா சனிக்கிழமையன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக 6,000 க்கும் மேற்பட்ட புதிய  தொற்றினை பதிவு செய்தது. ஒட்டுமொத்த கோவிட் -19 தொற்று சம்பவங்கள் 500,000 புள்ளியை மீறியது. நாட்டில் தற்போது 50,000 க்கும் மேற்பட்ட தொற்று நடப்பில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here