12 வயது சிறுமி காரில் இருப்பது தெரியாமல் காரை கடத்திய ஆடவர் கைது

ஈப்போ : ஸ்ரீ மஞ்சோங்கில் 12 வயது சிறுமியுடன் சேர்த்து காரை திருடை முயன்ற ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில் போதை பொருள் பழக்கம் உடையவர் என நம்பபப்படும் சம்மந்தப்பட்ட ஆடவர் ஸ்ரீ மஞ்சோங்க்கில் இருந்து போத்தாவிலுள்ள தனது தாயாரின் கல்லறைக்கு செல்வதற்காக அண்டை வீட்டவரின் மோட்டார் வண்டியை கடன் வாங்கி உள்ளார்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லாத காரணத்தால் அதனை ஸ்ரீ மஞ்சோங்கிலுள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்க்கு அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தபோது  கார்  ஒன்று (இன்ஜின் ஒட்ட நிலையில்) பார்த்ததாகவும் காரில் சிறுமி இருந்தது தெரியாமல் தான் காரை ஒட்டி சென்றதாகவும் பின்னர் காரில் இருந்த சிறுமி தன்னை கார் நிறுத்தப்பட்ட இடத்திலேயே திருப்பி கொண்டு சென்று விடுமாறு அழுதிருக்கிறார்.

அச்சிறுமியை திரும்பவும் கார் நின்ற இடத்திற்கு விட்டுவிட சென்றபோது, அங்குள்ள பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.  மேலதிக நடவடிக்கைக்காக இவ்வழக்கு  துணை அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று ஏ.சி.பி. நூர் உமர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here