கோவிட் -19 தொடர்பில் தவறான செய்திகளைப் பரப்பியதற்காக இல்லத்தரசி ஒருவருக்கு 5,000 வெள்ளி அபராதம்

கங்கர் : கடந்த ஏப்ரல் மாதம் கோவிட் -19 தொற்று குறித்து தவறான செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட இல்லத்தரசி ஒருவருக்கு, புதன்கிழமை (அக்டோபர் 13) செஷன்ஸ் நீதிமன்றம் 5,000 வெள்ளி அபராதம் விதித்தது.

நீதிபதி முசிறி பீட், நோர் சகினா ரசெலான் (31) என்ற அந்த பெண்மணிக்கு அபராதம் விதித்தார். அதனை செலுத்த தவறினால் ஐந்து மாத சிறைத்தண்டனை அவர் அனுபவிக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி லோட் 8664 ஜாலான் பாவ், கம்போங் பெலுகார், ஆராவில் காலை 10.31 மணியளவில் பொதுமக்களுக்கு பயம் அல்லது கவலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணின் மூலம் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை பயன்படுத்தி தவறான செய்திகளைப் பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மூன்று குழந்தைகளைக் கொண்ட அந்தப் பெண் மீது அவசரகால (அத்தியாவசிய அதிகாரங்கள்) பிரிவு 4 (1) (எண் 2) கட்டளை 2021 ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

அரசு வழக்கறிஞர் முஹமட் நோர்டின் இஸ்மாயில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார், அதே நேரத்தில் இல்லத்தரசி சார்பில் வழக்கறிஞர் முகமட் ஹாபிஸ் ராஜாலி ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here