அறியாமல் செய்த பிழை

 நடிகர் ஜான்  செனா.

மன்னிப்பு கேட்டார்!

பிரபல ரெஸ்ட்லரும் (wrestler), நடிகருமான ஜான் செனா, தனது ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்திற்கான விளம்பர வீடியோவில் தைவானை ஒரு நாடு என்று குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் தைவான் நாட்டின் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த, ஜான் செனா, தனது சமீபத்திய அதிரடி படத்தின் ஒன்பதாவது பாகமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸைப் பார்க்கக்கூடிய முதல் நாடு என்று தைவானை குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் சீனாவின் ஒரு பகுதியாகவே தைவானை சீன அரசு கருதுவதால் அவரது கருத்துக்கு சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.. எனினும் தைவான் ஒரு தன்னாட்சி பெற்ற தீவு நாடாகும். இது சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து தைவான் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுள்ளது.

எனினும் தைவான் ஒரு சுதந்திர நாடு என்ற கருத்தை சீன அரசு எதிர்க்கிறது. எனவே ஜான் சீனாவின் கருத்துக்கு, சமூக ஊடகங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து அவர் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.. இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்ட அவர், சீன மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

அந்த வீடியோவில்” ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9 படத்திற்காக நான் பல நேர்காணல்களில் கலந்துகொண்டு பேசினேன். ஆனால் ஒரு நேர்காணலின் போது நான் தவறு செய்தேன். சீனாவையும் சீன மக்களையும் நான் நேசிக்கிறேன், மதிக்கிறேன் என்று நான் சொல்ல வேண்டும்.

நான் தைவானை ஒரு நாடு என்று குறிப்பிட்டது மிகப்பெரிய தவறாகிவிட்டது. நான் செய்த தவற்றுக்கு மிகவும் வருந்துகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here