முக்கிய சாட்சிக்கு கொலை மிரட்டலா!

 

நவின் கொலை வழக்கில்

மூவர் கைது!

ஜார்ஜ்டவுன்-
டி. நவீன் கொலை வழக்கில் டிபிபி தரப்பு சாட்சிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த மாதத் தொடக்கத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன்னதாக மூன்று நபர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக டி. பிரவின் (வயது 22) கூறியிருக்கிறார் என வட கிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சோபியான்  சந்தோங் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு நவினுடன் சேர்ந்து பிரவினும் தாக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவத்தில் நவின் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக மாண்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கிய சாட்சிகளுள் ஒருவராக பிரவின் உள்ளார்.

கைதான மூவரும் 23 முதல் 26 வயதுடையவர்கள். கிரிமினல் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றவியல் சட்டம் பிரிவு 506 கீழ் இவர்கள் தடுப்புக் காவலில் விசாரிக்கப்படுகின்றனர்.

சனிக்கிழமை கைதான இவர்கள் போலீஸ் பிணையில் திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டனர். புக்கிட் குளுகோரில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே மூன்று நபர்கள் தன்னை இரண்டு முறை மிரட்டியதாகவும் பின்னர் பண்டார் பாரு ஆயர் ஹீத்தாமில் உள்ள தொம்யாம் கடையில் தன்னை மிரட்டியதாகவும் மே 22ஆம் தேதி பிரவின் போலீசில் புகார் செய்திருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here