இந்திய ரயில் டிரைவரின் சமயோசிதம் அமெரிக்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி!
இவரது ரயில் அங்குள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்துக்குள் நுழைந்தபோது நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஒருவரை அருகிலிருந்த மற்றொருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார்.
இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடைமேடையில் இருந்த பயணிகள் அனைவரும் ரயில் வரும் திசையைப் பார்த்து கைகளை அசைத்து ரயிலை நிறுத்தும்படி சைகை காட்டினர்.
இதை கவனித்த டோபின் மடாதில் சாதுர்யமாக செயல்பட்டு அவசரகால பிரேக் மூலம் ரயிலை உடனடியாக நிறுத்தினார்.
எனினும் தண்டவாளத்தில் விழுந்ததில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி ஒருவரின் உயிரை காப்பாற்றியதற்காக ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள், டோபின் மடாதிலை பாராட்டினர். இதனிடையே தண்டவாளத்தில் தள்ளி விடப்பட்டவர் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.









