வூஹான் ஆய்வகம்தான் கரோனாவின் தோற்றம்

பிரிட்டன் உளவு அமைப்புகள்

தெள்ளத் தெளிவு!

சீனாவின் வூஹான் ஆய்வகச்செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கின்றன. இதற்கெல்லாம் சீனா ஒருபோதும் அசராது என்பதற்கு அதன் மறுப்புப் பதில்களே சான்று.

அவர்கள் கொரோனா விவகாரத்தில் தங்கள் தவற்றை ஒருபோதும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை. உலகை மிரட்ட, தங்கள் காலடியில் விழச்செய்ய  அவர்களின்  கண்டுபிடிப்புதான் கொரோனா என்பதில் உலகம் தெளிவாகி வருகிறது.

பல ஆண்டுகள் ஆய்வுகளுக்குப்பின் மிருகங்களுக்குச் செலுத்தி , இது மிருகங்களிடமிருந்து வந்த தொற்று என்ற நாடகத்தை அரங்கேற்றியும் இருக்கலாம். ஆனால் கொரொனாவின் பிறப்பிடம் வூஹான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை பல நாடுகள் நம்புகின்றன.

சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா தீநுண்மி கசிந்ததன் மூலம்தான் கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியது என்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன  என பிரிட்டன் உளவு அமைப்புகள் திட்டவட்டமாக  நம்புவதாக ‘சன்டே டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, கொரோனா தீநுண்மியின் தோற்றம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பை பிரிட்டனின் தடுப்பூசிகள் துறை அமைச்சா் நதீம் ஷகாவி வலியுறுத்தியுள்ளாா்.

உலகம் முழுவதும் மனித உயிா்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தீநுண்மி எங்கு தோன்றியது என்பது குறித்து தொடா்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து அந்தத் தீநுண்மி கசிந்திருக்கலாம் என பரவலாக நம்பப்படுகிறது.

வெளவால்களிலிருந்து கரோனா தீநுண்மி உருவானதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது ஆய்வகத்திலிருந்து அந்தத் தீநுண்மி கசிந்திருக்கலாம் என்பதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளதாக பிரிட்டன் உள்பட மேற்கு நாடுகளின் உளவு அமைப்புகள் முதலில் கருதின.

ஆனால், அதன்பின்னா் செய்யப்பட்ட மறு ஆய்வில், ஆய்வகத்திலிருந்து கொரோனா தீநுண்மி கசிந்திருப்பதற்கான சாத்தியகூறு உள்ளதாக பிரிட்டன் உளவு அமைப்புகள் இப்போது நம்புவதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி சன்டே டைம்ஸ் தெரிவித்துள்ளன.

‘நம்மை இருவழிகளில் அழைத்துச் செல்லும் ஆதாரங்கள் இருக்கலாம். சீனா்கள் இருவழிகளிலும் பொய் சொல்வாா்கள். அதை அறிந்துகொள்வோம் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை’ என விசாரணையில் ஈடுபட்ட மேற்கத்திய உளவுத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. உளவு அமைப்புகள் சீனாவை சோந்த பணியாளா்களிடமிருந்து தகவல்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன’ எனவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடா்பாக பிரிட்டன் தடுப்பூசிகள் துறை அமைச்சா் ஷகாவி கூறுகையில், கரோனா தீநுண்மியின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பால் முழுமையாக விசாரிக்க முடியும். பலகட்ட விசாரணையை நடத்த அனுமதிப்பது முக்கியமானது. அப்போதுதான் கொரோனாவின் ஆரம்ப பரவல் குறித்து நன்கு புரிந்துகொள்ள முடியும் என்றாா்.

வெளியுறவு தரவு கமிட்டி தலைவரும் கன்சா்வேடிவ் கட்சி எம்.பி.யுமான டாம் டூகன்ஹாட், ‘எதிா்காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வூஹான் தொடா்பாக உலகம் முழுவதும் உள்ள நமது கூட்டாளிகள்  உலக சுகாதார அமைப்புடன் இணைந்து விசாரணையை தொடங்க வேண்டும்’ என கடந்த வாரம் தெரிவித்திருந்தாா்.

கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து புதிதாக விசாரணை நடத்தி 90 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டுமென அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

வூஹான் ஆய்வகத்தில் 2019, நவம்பரில் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளா்கள் பலா் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பின் அறிக்கை வெளியானதைத் தொடா்ந்து பைடன் அந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

ஆனால், வூஹானில்தான் கரோனா தீநுண்மி தோன்றியது என்பதை சீனா தொடா்ந்து மறுத்து வருகிறது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்டிருந்தாலும் உலகின் வேறுபட்ட பகுதிகளில் கரோனா தீநுண்மி தோன்றியிருக்கலாம் என அந்நாடு உறுதியாக கூறி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here