20 ஆண்டுகள் சிறைவாசமே தண்டனை!
யார் இந்த ரெட்டி?
தனது ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகப் போலியான ஆவணங்களை தயார் செய்து, அதன்மூலம் மருத்துவ, தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரெட்டி தனது ஆஸ்பத்திரிகள் மூலம் சுகாதார மோசடியில் ஈடுபட்டு வருவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து ரகசியமாக விசாரணை நடத்தியதில், ரெட்டி காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி 52 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.376 கோடியே 44 லட்சத்து 72 ஆயிரம்) மோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளியே என அறிவிக்கப்பட்டார்.
அதன்படி ரெட்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, அவர் மோசடி செய்த 52 மில்லியன் டாலரை காப்பீட்டு நிறுவனங்களுக்குத் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டார்.









