நிவாரணம் கொடுப்பாரா வைரமுத்து!

 -விட்டுவாரா சின்மயி!

தனிப்பட்ட முறையில் கேட்ட மன்னிப்பு போதாது. வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் அளிக்கவேண்டும். அப்படி செய்யாதவரை வைரமுத்துவேன் எதிர்ப்பேன் என்பதையும், மன்னிப்பு கேட்டு நிவாரணம் அளித்தால் விட்டுவிடுவதாகவும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார் பாடகி சின்மயி.

வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருது வழங்கக்கூடாது என்று எதிர்த்தோம். எங்களுடன் சேர்ந்து கேரளாவின் வுமன் சினிமா கலெக்ட்டிவ் அமைப்பினரும் எதிர்த்தார்கள். அதனால்தான் விருது மறுபரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்தது ஓஎன்வி அகாடமி.

ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது மாதிரி, தராத விருதை திருப்பி தருகிறேன் என்கிறார் வைரமுத்து. தராத விருது பணத்தையும் திருப்பி கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தருவதாக சொல்கிறார் என்று கமெண்ட் அடித்திருக்கிறார் சின்மயி.

வைரமுத்துவை தொடர்ந்து எதிர்த்து வருவது குறித்து சின்மயி, எனக்காக மட்டுமல்ல, வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் குரல் கொடுக்கிறேன். வைரமுத்து பாலியல் குற்றவாளி. அதனால் அவரை எதிர்த்துக்கொண்டே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

வைரமுத்து என்னிடம் மன்னிப்பு கேட்ட ஆடியோ ஆதாரம் இருக்கிறது. மற்ற பெண்களிடமும் இதுபோல் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால், அவர் பொதுவெளியில் வெளிப்படையாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுதான் எங்களுக்கு வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதுமட்டுல்லாமல் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் அவர் நிவாரணம் கொடுக்க வேண்டும். எனக்கு கூட வேண்டாம். எனக்கு நல்ல டேலண்ட் இருக்குது. நான் நல்லாவே பிழைத்துக்கொள்வேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here