16 ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளி..

 -இப்போ வழக்கறிஞர்! 

பிறப்பை வைத்து ஒரு மனிதனின் தகுதியை எடைபோட்டுவிடமுடியாது. செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனும்  நாடாளமுடியும் ,சட்டங்களை இயற்றமுடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மனிதனின் தவறான செயலுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கும்.  வெளியில் அது குற்றமாகவும் அவனுக்கு அது தர்மமாகவும் இருக்கும்.

பொது நீதியின் முன் குற்றவாளி ஆக்கபட்டதால் அவனால் மனிதனாக மாறவே முடியாது என்று அறிதியிடும் தகுதி யாருக்கும் இல்லை?

முடியும் என்று சொல்வதற்கும் ஆதாரம் வேண்டுமல்லவா? இதோ … ஓர் உண்மை!

அமெரிக்கா:

அப்போ குற்றவாளி… இப்போ வழக்கறிஞர்… நம்ப முடிகிறதா?

16 ஆண்டுகளுக்கு முன்னர்  போதை மருந்து குற்றவாளியாக நின்று தண்டனை பெற்ற ஒரு நபருக்கு, அதே நீதிபதி, வழக்கறிஞராக பதவி பிரமாணம் செய்து வைத்த சுவாரசியமான நிகழ்ச்சி அமெரிக்காவின் மிச்சிகனில் நடைபெற்றுள்ளது.


நீதிபதி புரூஸ் மோரோவுக்கு முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்ட எட்வர்ட் மார்டெல்லுக்கு கோகெயின் விற்றதற்காக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கும் நிலை இருந்தது. ஆனால், அப்போது 27 வயதாக இருந்த எட்வர்ட் மார்டெல் மற்ற குற்றவாளிகளைப் போல அல்லாமல் இருந்ததையும், அவர் திருந்துவார் என்பதையும் கணித்து 3 ஆண்டு தண்டனை மட்டுமே வழங்கினார் நீதிபதி புரூஸ் மோரோ.

போதை மருந்தை விற்க வேண்டாம். உன்னால் பெரிய நிறுவனத்தின் தலைவர் என்ற அளவுக்கு உயர முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகளையும் நீதிபதி வழங்கினார்.

அதன் பின்னர் விடுதலையாகி சட்டம் படித்த எட்வர்ட் மார்டெல்லுக்கு மிச்சிகன் பார் கவுன்சில் வழக்கறிஞராக அதே நீதிபதியே பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

எதையும் வார்த்தையால் மாற்ர முடியும் என்பத்ர்கு இதைவிட சான்று வேறு என்ன இருக்க முடியும்.  தண்டனை 20 ஆண்டுகளாக இருந்திருந்தால் ஒரு வழக்கறிஞரை நாடு இழந்திருக்கும். 

ஒரு மனிதனை அடையாளம் காண்பதும் நீதியின் வேலைதான். நீதி என்பது இயற்கையின் கொடை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here