சகுனி,மாஸ் உள்ளிட்ட இந்திய தமிழ் படங்களில் நடித்த நடிகை பிரணிதா சுபாஷுக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவுக்கும் கடந்த திங்கட்கிழமை (மே 31) திருமணம் நடந்துள்ளது.
தனது திருமணம் பற்றி அவர் கூறுகையில், இது காதல் மற்றும் பெரியவர்கள் ஏற்பாடு செய்த திருமணம் மற்றும் எனக்கு நிதின் ராஜுவை பல ஆண்டுகளாகத் தெரியும். எனவே இரு குடும்பங்களின் அனுமதியுடன் நாங்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு எடுத்தோம் என்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டோம்,” என்றும் கூறினார்.