பாவாடை அணிந்து பாடம் எடுத்த ஆண் ஆசிரியர்கள்

 – சகிப்புத்தன்மை வளர்ச்சிக்கு

   புதிய முயற்சியாம்!

ஸ்பெயினில் ஆண் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சகிப்புத்தன்மையை வளர்க்க வகுப்பிற்கு பாவாடை அணிந்து பாடம் எடுத்த புதுமையான சிந்தனைப்புரட்சி காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயினில் ஆடைகளுக்கு பாலினம் இல்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவதற்காக ஆண் ஆசிரியர்கள் இணைந்து பள்ளிக்கு பெண்கள் உடுத்தும் பாவாடையை அணிந்து பாடம் எடுத்தனர்.
ஏனெனில் மைக்கேல் கோமஸ் என்ற மாணவர் பாவாடை அணிந்ததற்காக பில்பாவோவில் உள்ள ஒரு பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, 2020 அக்டோபர் 27 அன்று முதல் ஆடைகளுக்கு பாலின பாகுபாடு இல்லை என்ற பிரச்சாரம் தொடங்கியது.
அப்போது மைக்கேல் கோமஸ் டிக்டாக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து பெண்ணியம், பன்முகத்தன்மைக்கு தான் ஆதரவைக் காட்டுவதாக விளக்கினார்.
இது அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதைத்தொடந்து ஸ்பெயினில் 2 ஆசியர்கள் பாவாடை அணிந்து வகுப்பு எடுத்துள்ளனர், ஏனெனில் இந்த மாதம் வகுப்பில் தங்கள் மாணவர்களில் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர்கள் பாவாடை அணிந்து வகுப்பு எடுத்தனர்.
அதாவது வல்லாடோலிடில் உள்ள தனது பள்ளியில் அனிம் சட்டை அணிந்ததற்காக மாணவர் கேலி செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் மானுவல் ஒர்டேகாபோர்ஜா வெலாஸ்குவேஸ் ஆகியோர் பாவடை அணிந்தனர்.
மேலும் அவர்கள் இது சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யப்பட்டது அல்ல என்றும், ஆனால் மாணவர்களிடையே சகிப்புத்தன்மையையும் மரியாதையையும் அதிகரிப்பதாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
ஒர்டேகா தனது சமீபத்திய ட்வீட் ஒன்றில் “மரியாதை, பன்முகத்தன்மை, இணை கல்வி, விருப்பமுள்ள ஆடைகளின் தேவைகள் ஆகியவற்றை பள்ளிக்கூடம் மாவணர்வகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here