–ஐசக் ஹெர்சாக் தேர்வு
இதில் மூத்த அரசியல்வாதியும், ஒரு முக்கிய இஸ்ரேலிய குடும்பத்தின் வாரிசுமான ஐசக் ஹெர்சாக் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
60 வயதான ஐசக் ஹெர்சாக் இஸ்ரேல் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 2013- ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தந்தை சைம் ஹெர்சாக் இஸ்ரேலின் முன்னாள் அதிபர் ஆவார். அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு சைம் ஹெர்சாக் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதராக இருந்தார். அதே போல் ஐசக் ஹெர்சாக்கின் மாமா, தாத்தா ஆகியோரும் அரசின் முக்கிய பதவிகளை வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.