உலக தமிழர் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட நபர்

 பிறந்த தினம் இன்று.!

 

உலக தமிழர் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட இர.ந.வீரப்பன் 1930ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். மலேசியத்தில் வாழ்ந்தவரான இவர் உலகத் தமிழ்மொழிக்காகவும், உலக  மக்களின் ஒருங்கிணைப்புக்காகவும் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டவர்.

இவர் சிறுகதை, ஆராய்ச்சி கட்டுரைகள், ஆய்வு பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழி போராட்டம், உலகளாவிய தமிழ் பண்பாட்டு தொடர்புகள் என பல துறைகளில் தொண்டாற்றியவர்.

இவரைப் பற்றி தமிழகத்தின் பாவலர் ஐயா கதிர் முத்தையனாரும், லண்டனைs சேர்ந்த சுரதா முருகையனாரும் நூல்களை எழுதியுள்ளனர்.

இவர் தமிழ் உயர்வுக்காக தமிழ் பண்பாட்டு இயக்கத்தை தோற்றுவித்து, அதன் தலைவராக தொண்டாற்றினார்.

இனம், மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியதோடு அதற்குரிய ஆக்கப்பூர்வமான பணிகளையும் மேற்கொண்ட இர.ந.வீரப்பன் 1999ஆம் ஆண்டு மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here