கொரோனா மூன்றாம் அலை நுரை ஈரலைத் தீண்டும்!

மூச்சு பயிற்சி முக்கியமானது!

கொரோனா வைரஸுக்கு “இதுதான் மருந்து” என்று எந்த மருந்துகளும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இருக்கிறது. இதில் சில மூச்சு பயிற்சியும் செய்ய வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

ஒட்டுமொத்த உலகையும் வீட்டுக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கும் நுண்ணுயிரி! ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவி, தொற்றை ஏற்படுத்தும். 

இதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க தற்போது சமூக விலகலிலும் மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனிமைப் படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்திவரும் நாம் இந்த நேரத்தில் சில மூச்சு பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

சுவாசப்பயிற்சி பொதுவாக நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. இந்த உடற்பயிற்சியை செய்யும் போது ஸ்டெம் செல்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், புதிய திசுக்களின் மீளுருவாக்கம் அதிகரித்தல், பல்வேறு வகையான நோய்க்கிருமிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், மனதையும் உடலையும் தளர்த்துவது போன்ற பல நன்மைகளை இது வழங்குகிறது.

90 சதவீத நோயாளிகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நுரையீரல் பாதிப்பை அனுபவிக்கின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதில், 10-12 சதவீதம் பேருக்கு நிமோனியா, நுரையீரல் தொற்று ஏற்படக்கூடும், இதில் அல்வியோலி, நம் நுரையீரலில் இருக்கும் சிறிய காற்றுப் பைகள் வீக்கமடைகின்றன.

இருமல் அல்லது அசெளகரியம் இல்லாமல் 10 வினாடிகளுக்கு மேல் மூச்சு பிடித்து வைத்திருப்பது நல்ல நுரையீரல் செயல்பாடு மற்றும் COVID-19 இன் அபாயத்தைக் குறைக்கும் என்பதைக் குறிக்கிறது. இது குறித்து மருத்துவர் கூறுகையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களும், வீட்டில் ஆக்ஸிஜனை பயன்படுத்தும் நபர்களும் சுவாச பிடிப்பு பயிற்சி செய்வது ஆக்ஸிஜன் தேவையை குறைக்க உதவும். மேலும் அவர்களின் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் என்கிறார்.

மூச்சுப்பயிற்சி செய்யும் போது நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்க தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்க வாயைத் திறந்து உங்கள் மார்பை அதிகபட்சமாக நிரப்ப, உங்களால் முடிந்த அளவு காற்றை உள்ளிழுக்கவும். பின்னர், உதடுகளை இறுக்கமாக மூடுங்கள். உங்களால் முடிந்தவரை உங்கள் மூச்சைப் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். எவ்வளவு நேரம் வைத்திருக்கிறீர்கள் என்று கவனியுங்கள்.

நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என மூச்சுப் பிடிப்பு பயிற்சியை பயிற்சி செய்யலாம். 25 விநாடிகள் அதற்கு மேலாக மூச்சை பிடிப்பது பாதுகாப்பாக இருக்கும். மூச்சைப் பிடிக்க மிகவும் கடினமாக முயற்சி செய்ய வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here