மூன்றாவது கண் கருவி கண்டுபிடிப்பு

  தென்கொரிய நபரின் அசத்தல்..!

தென்கொரியா:
செல்போனிலேயே எந்த நேரமும் கண் இமைகளும் மூழ்கி கிடப்போருக்காக மூன்றாவது கண் போன்ற புதிய கருவியை தென்கொரியாவை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனா தாக்கம்  ஊரடங்கு போன்றவற்றால் பலர் செல்போனிலேயே மூழ்கி கிடக்கின்றனர்.
இப்படியானவர்கள் சாலைகளில் செல்லும்போது கூட செல்போனில் இருந்து கண்ணை விலகாமல் செல்வதால் விபத்துகளும் நேருகின்றன. இதற்காக தென் கொரியாவைச் சேர்ந்த பான்பின் ஹூக் என்பவர் புதிய கருவியை உருவாக்கியுள்ளார்.
நெற்றியில் பொருத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மூன்றாவது கண் எனப்படும் இந்த கருவி 2 மீட்டர் இடைவெளியில் வரவுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கும் வகையில் உள்ளது.
2 மீட்டர் தொலைவிற்குள் ஆபத்து வந்தால் எச்சரிப்பதற்காக கைரோ என்ற சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. செல்போனே கதி என கிடப்போருக்கு இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும் என மூன்றாவது கண்ணின் வடிவமைப்பாளராக பான்பின் ஹூக் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்கள் பலர் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களைக் கண்டறிந்து அசத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்கொரிய நபரின் மூன்றாவது கண் கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here