இன்று 5,566 பேருக்கு கோவிட் தொற்று

புத்ராஜெயா: மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) 5,566 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் கோவிட் -19 எண்ணிக்கை இப்போது மொத்தம் 627,652 ஆகும்.

ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர்  டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், சிலாங்கூரில் 1,524 புதிய வழக்குகள் உள்ளன. இது நாட்டிலேயே அதிகமாகும்.

இதைத் தொடர்ந்து 707 தொற்றுகளுடன் சரவாக், 505 உடன் நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் 466, ஜோகூர் 456 தொற்றும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here