இன்று ஜூன்.10
தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு சூன் 10 நாள் தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி – அழகம்மை இணையர்களின் தலைமகனாகப் பிறந்தார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை (1944-46), இளங்கலைக் (1946-48) கல்வியைப் பெற்றார். தமிழறிஞர் ஆ. கார்மேகக் கோனார், ஆங்கிலப் பேராசிரியர் இரஞ்சிதம் ஆகியோர்தம் அன்பைப் பெற்ற மாணவராகத் திகழ்ந்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று நூலக அறிவியல் பட்டயமும் (1949-50), நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியலில் முதுவர் பட்டமும் (1953_55), மதுரை தியாகராசர் கல்லூரியில் கல்வி இளவர் பட்டமும் (1957-58) நிறைவு செய்தார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் பயின்று நூலகவியலில் முதுவர் பட்டமும் (1961-62) பெற்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பிரான்சு (1955-56), ஜெர்மன் (1956 – 57) மொழிகளில் சான்றிதழ்களும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று சோதிடத்தில் சான்றிதழும் பெற்றார்.
இவரது எழுத்தில் சீ.இரா.அரங்கநாதன் எழுத்தின் தாக்கம் உண்டு