புராணக்கதைகளில் இப்படியான கதைகள் எல்லாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒருவர் தனது 37 வது திருமணத்தை நடத்தியிருக்கிறார். அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் இந்த திருமணத்தை அவர் செய்துள்ளார்.
இது குறித்து ரூபர் சர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் முதியவர் ஒருவருக்கு இளம் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது.
அந்த வீடியோ பதிவிடும் போது அவர் அதில் “தைரியமான மனிதர், 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் என குறிப்பிட்டுள்ளார். இந்த திருமணம் எங்கு நடந்தது? இந்த திருமணத்தை செய்தது யார்? இதில் குறிப்பிட்டிருப்பது உண்மை தானா என்ற விபரங்கள் தெரியவில்லை. எனினும் இந்த திருமணத்திற்கு இந்த வீடியோவை தவிர வேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.