அறைந்த நபருக்கு சிறையில் ஓர் அறை

 

நான்கு மாதம் தண்டனை!

பொது இடத்தில். மக்களை சந்தித்து கைகுலுக்கியபோது, அருகே இருந்த நபர் ஒருவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் கன்னத்தில் அறைந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்து, கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், மக்களிடையே இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து, மக்களை சந்தித்து உரையாடுவதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பிரான்சின் தென்கிழக்கு மாகாணத்திற்கு அதிபர் இமானுவேல் மேக்ரான் சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.

அப்போது,அவரை வரவேற்க ஏராளமானோர் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்து, ஒவ்வொருவரிடமும் கைகுலுக்கிக்கொண்டு வந்தார் அதிபர் மேக்ரோன். அப்போது, பொதுமக்களுடன் கலந்து கூட்டத்தின் முன்வரிசையில் நின்றிருந்த நபர் ஒருவர், அதிபருக்கு கை கொடுத்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், விதமாக , அதிபரின் ஒரு கையை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் திடீரென அதிபரின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

இதைக்கண்ட பாதுகாவலர்கள் அந்த நபரை மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து, அந்த நபருடன் இருந்த மற்றொரு நபர் மேக்ரானுக்கு எதிராக முழக்கமிட்டடார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே மேக்ரோனை பாதுகாவலர்கள் ‘அங்கிருந்து அழைத்துச்சென்றனர். உலகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதிபரைக் கன்னத்தில் அறைந்த நபரையும், அவரருடன் இருந்த மற்றொரு நபரையும் கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த நபர் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு 4 மாதம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here