செந்தூல் போலீஸ் தலைமையக தளவாடப் பொருட்கள் வைத்திருந்த பகுதியில் தீ

கோலாலம்பூர்: செந்தூல் போலீஸ் தலைமையகத்தில் ஒரு தளவாடப் பொருட்கள் வைத்திருந்த பகுதி வியாழக்கிழமை இரவு (ஜூன் 10) இரவு தீப்பிடித்தது. இரவு 11.57 மணியளவில் செந்தூல் மற்றும் தித்திவாங்சா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

தீ இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீயில் சாம்பலானது. அதிகாலை 12.33 மணிக்கு அது முழுமையாக அணைக்கப்பட்டது.  தளவாடப் பொருட்கள் வைத்திருந்த பகுதி 70% சேதமடைந்ததாகவும் ஆனால்  தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தகவல் வழி தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here