பிரபல பணக்காரர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

ட்விட்டரில் எழுந்துள்ள பரபரப்பு கேள்வி..!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனக்கு சொந்தமான அனைத்து வீடுகளையும் விற்று விட்டதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் தனக்கு சொந்தமான வீடுகளில் ஒரு வீட்டைத் தவிர மற்ற அனைத்தையும் விற்றுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே “உங்களுடைய எல்லா வீடுகளையும் விற்று விட்டு அதன்பின் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு மார்ஸ் கிரகத்தில் தேவையான செலவுகளை செய்வதாகவும், அதற்காகவே நீங்கள் இவ்வாறு வாழ்வினை எளிமையாக்கி கொண்டதாக கேள்வி பட்டேன்” என்று ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்கிடம் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு எலான் மஸ்க் ” பே பகுதியில் உள்ள ஒரு வீட்டை சுப நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்வதற்காக வாடகைக்கு விட்டுள்ளதால் அதனை விற்கவில்லை மற்ற அனைத்து வீடுகளையும் விற்று விட்டேன்” என்று பதில் அளித்துள்ளார்.

இதற்கிடையே எலான் மஸ்க் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வருமான வரியும் முறையாக கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here