மனிதர்கள் ஏற்படுத்தியிருக்கும் நீர் மாசுப்பாடு; கடலில் வேகமாக பரவி வரும் sea snot (எ) கடல் சளி

துருக்கி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள ஒரு நம்ப முடியாத மாற்றம் உலக விஞ்ஞானிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. துருக்கியில் உள்ள கடலுக்கு சளி பிடித்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு, பூமி அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதற்கான சான்று என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது மனிதர்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடல் சளியினால் மனிதர்களுக்கு என்ன தீங்கு என்று பார்க்கலாம்.

மனிதர்களின் உடலில் பிரச்சினை ஏற்பட்டால் சளி பிடிக்கும். அதேபோல், கடலுக்குக் கூட உடல்நலம் சரி இல்லாமல் போனால் சளி பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், கடலும் மனித உடலும் ஒரே மாதிரியானது தான். மனிதனின் உடலில் அதிக வெப்பமடைந்தால் சளி பிடிக்கும். அதேபோல் தான் கடலும், கடலின் நீர் அதிகமாக வெப்பைமடைந்தால் கடலுக்கும் சளி பிடிக்கும்.

இதை விஞ்ஞானிகள் ‘சீ ஸ்நாட்’ (sea snot) என்று குறிப்பிடுகிறார்கள். இது மனிதர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.மனிதனின் உடலில் இருக்கும் சராசரி வெப்பநிலை திடீரென அதிகரிக்கும் பொழுது, மனிதனுக்குச் சளி பிடிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, காரணம் இல்லாமல் உங்களுக்குச் சளி பிடித்துவிட்டது என்றால், உங்களின் உடல் சூடு அதிகரித்திருக்கிறது என்று அர்த்தமாம்.

எதனால் இந்த கசடு கடலில் திடீரென தோன்றியுள்ளது? இதனால் என்ன-என்ன ஆபத்துகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் மனிதர்களை எச்சரிக்கின்றனர் என்பது பற்றிப் பார்க்கலாம். ‘சீ ஸ்னோட்’ என்பது கடல்சார் சளி ஆகும், இது காலநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் இணைந்து நீர் மாசுபாட்டின் விளைவாக ஆல்கேக்கள் ஊட்டச்சத்துக்களுடன் அதிகமாக இருக்கும்போது உருவாகிறது.

இத்துடன் மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள நீர் மாசுபாடு பிரச்சினை காரணமாக இந்த கடல் சளி தற்பொழுது புது உருவம் எடுத்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பைட்டோபிளாங்க்டன் மற்றும் அதிகப்படியான வீட்டு மற்றும் தொழில்துறை கழிவுகளைக் கட்டுப்பாடில்லாமல் கடலுக்குள் கொட்டுவது போன்ற காரியங்களை மனிதர்கள் தொடர்ந்து செய்து வந்த காரணத்தினால், இந்த தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாகச் சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here