எம்சிஓ நீட்டிப்பு தவிர்க்க இயலாதது; ஆனால் உணவக நேரத்தை நீட்டிக்கவும்- பிரெஸ்மா வேண்டுகோள்

அரசாங்கம் நாடு தழுவிய நிலையில் எம்சிஓவை ஜூன் 15ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது தவிர்க்க இயலாதது என்பதனை நாங்கள் உணர்கிறோம். ஆனால் இந்த எம்சிஓ காலக்கட்டத்தில் அத்திவாசிய தேவைகளுக்கான பணிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது.

ஆனால் உணவகங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அரசாங்கம் அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால் வேலைக்கு செல்பவர்கள்  காலை 6 மணியளவில் சிற்றுண்டி (காலை பசியாற) சாப்பிட வருவார்கள். அதனால் இந்த எம்சிஓ காலகட்டத்தில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி  வழங்க வேண்டும் என்று மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரெஸ்மா) தலைவர் டத்தோ ஜவஹர் அலி (டத்தோ அலி மாஜு) அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

உணவகங்கள் தற்பொழுது பல பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறது. எங்களின் நிலையை அரசாங்கம் கவனத்தில் கொண்டு கடை நடத்தும் நேரத்தை நீட்டிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதோடு எங்களுக்கு 6 மாத காலம் வங்கி கடன் நீட்டிப்பை அறிவிக்க வேண்டும் என்று டத்தோ அலி மாஜு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here