மல்யுத்த வீர்ர் ஜான் சீனாவுக்குப் பிடித்தவராம்!

 யாராக இருக்கும்!

உலக கிரிக்கெட் அரங்கில் ஓர் அசாத்திய வீராக வலம் வருபவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவரை ‘ரன் மிஷின்’ என்ற அடைமொழியுடன் பல கிரிக்கெட் ஜாம்பவான்களால் வர்ணிப்பது உண்டு. அந்த அளவிற்கு மிக நுணுக்கமாகவும், உத்வேகத்துடனும் ஆடி ரன்களை குவிக்கும் திறமை படைத்தவர்.

களமிறங்கும் போட்டிகளில் எல்லாம் அதிரடி காட்டும் கேப்டன் கோலி சர்வதேச அளவில் இதுவரை படைக்கப்பட்ட சாதனைகளை ஒன்றன் பின் ஒன்றாக முறியடித்து வருகிறார். இதனாலே உலகம் முழுதும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதோடு பல இந்திய இளைஞர்களுக்கு முன் உதாரணமாகவும் உள்ளார்.

கேப்டன் கோலிக்கு உலக முழுதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களில் அமெரிக்க மல்யுத்த வீரரான ஜான் சீனாவும் ஒருவாரம்.

 இதை அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படம் வாயிலாக வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு எதையும் எழுதவில்லை.

இந்த நிலையில், 16 முறை WWE சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள ஜான் சீனாவின் இந்த பழைய பதிவு தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த இரு அசாத்திய வீரர்களின் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

நன்றி  : டி எச்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here