ஜார்ஜ் டவுன்: போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதாக நம்பப்படும் 46 வயது நபரை போலீசார் துரத்தி சுட்டு பிடித்தனர். அயர் இடாமில் உள்ள கம்போங் மலாயுவில் இருந்து அந்த நபரை போலீசார் துரத்திச் சென்றனர். காலை 6.40 மணியளவில் மைவியில் இருந்த சந்தேக நபரை இரண்டு போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதாக வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் சோபியன் சாண்டோங் தெரிவித்தார்.
அவரை பிடிக்க துப்பாக்கி சூடு நடத்தியபோது இரண்டு குண்டுகள் அவரது கார் டயரைத் தாக்கின. சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவ்வாடவரை பின்தொடர்ந்தனர். அவர் ஜாலான் பேராக்கை அடைந்தபோது, சந்தேக நபர் தனது காரின் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு சந்தை அருகே சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒரு 61 வயது உடல்பேறு குறைந்த ஆடவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சந்தேகநபர் உடனடியாக வெளியேறினார். போலீசார் இறுதியாக சந்தேகநபரின் கார் Batu Maung பகுதியில் பிடித்ததோடு அவ்வாடவரையும் கைது செய்தனர். அந்த நபரின் காரில் போதைப்பொருள் பொருட்களையும் போலீசார் கண்டுபிடித்தனர்.





















