நிர்மாணிப்புத்துறையில் TVET கல்வி! உயர் சம்பள வேலை வாய்ப்புகள்!

பி.ஆர்.ராஜன்

திவெட் (TVET) எனப்படும் கல்வி, தொழில்நுட்பப் பயிற்சி. தொழில்பயிற்சி என்பது நாட்டு மேம்பாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறது என்று துணைப் பிரதமர் தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி தெளிவுபடக் கூறியிருக்கிறார்.

2030 தேசிய திவெட் கொள்கைக்கு ஏற்ப நாட்டு வளர்ச்சிக்கு இக்கல்வி அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதற்காக 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று புறநகர், வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய அளவில் போட்டியைத் தரக்கூடிய வகையில் திவெட் கல்வி நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உயர் சம்பளத்துடன் வேலை வாய்ப்புக ளையும் திவெட் வழங்குகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

திவெட் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பொதுப்பணித்துறை முன்னெடுத்திருக்கும் திட்டங்கள் பிரதிபலிக்கின்றன. கட்டுமானத் தொழில்துறை மேம்பாட்டு வாரியம் (CIDB) ஒரு புதிய சுலோகத்தை அறிமுகம் செய்திருக்கிறது. CIDB Peneraju TVET Pembinaan என்ற அந்த சுலோகம் கட்டுமானத்துறையில் திறன்மிக்க பணியாளர்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் ஒரு மகத்தான திட்டமாகும்.

அதேசமயம் நிர்மாணிப்புத் திறன் தேர்ச்சி. கட்டமைப்பு (CSQF)தகுதிச் சான்றிதழையும் CIDB உருவாக்கியிருக்கிறது. கட்டுமானத்துறைக்கு தேவையான திவெட் பயிற்சி மாணவர்களை உருவாக்கிடுவதற்கு Akademi Binaan Malaysia (ABM), CIÓB Technologies Sdn Bhd (CIDB Tech) போன்ற அமைப்புகளை -ருவாக்கி கட்டுமானத்துறையில் உயர்திறன் பெற்றவர்களை உருவாக்கி வருகிறோம். ABM 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

CIDB Tech 2020ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இவற்றின் தோற்றத்திற்குப் பிறகு தொழில்திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியிருக்கிறது. நிர்மாணிப்புத் துறைகளுக்கு உடல் உழைப்பு மட்டுமன்றி அது சார்ந்த துறைகளில் திறன் பெற்றவர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற இலக்குக்கு இந்த 2 அமைப்புகளும் பாடாற்றி வருகின்றன.

திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே திவெட் கல்வியில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது. நாட்டின் கட்டுமானத்துறை மேம்பாட்டிற்கு திறன் பெற்ற தொழிலாளர் வளம் இன்றியமையாததாக இருக்கிற இந்தத் துறைக்குத் தேவையான தரம் மிக்க. திறன்மிக்க உருவாக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு தொழில் பயிற்சித் திட்டங்களை அமல்படுத்தி ஆள்பலத்தை வருகிறது. இதனை நனவாக்குவதற்கு CIDB யின் களமாக ABM விளங்குகிறது. நாட்டின் இன்றைய தேவையாக இருக்கின்ற திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குவதற்கு ABM இவை யாவும் நிர்மாணிப்புத்துறைக்கு ஏற்புடையதாக இருக்கின்றன.

ஆறு வகையான பயிற்சிகளை அமல்படுத்தியிருக்கிறது. அதேசமயத்தில் 2020 பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்ட CIDB Technologies Sdn Bhd இப்பயிற்சிகளை மலேசியா முழுவதும் அமல்படுத்தும் ஏற்றிருக்கிறது. மேலும் தொழில் திறன் மிக்க மனித வளத்தை ஆய்வு செய்து மதிப்பீடு செய்யும் பொறுப்பையும் இந்த அமைப்பு ஏற்றிருக்கிறது. பொறுப்பை CIDB Technologies Sdn கொண்டிருக்கின்றது. இவற்றில் 70 பேர் பணியாற்றுகின்றனர். Welding, Blasting, Bhd நாடு முழுவதும் 7 கிளைகளைக் Painting, Non Destructive Testing ஆகிய துறைகளில் திவெட் பயிற்சிகளை வழங்குகின்றது.
மேலும் CIDB Tech கட்டுமானத்துறைக்குத் தேவையான எண்ணெய். கியாஸ் துறை சேவைகளையும் வழங்குகின்றது.

2001 தொடங்கி 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரை ABM,CIDE Technolegies ஆகிய 2 அமைப்புகளும் கீழ்க்குறிப்பிட்ட பயிற்சிகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றன.

இளைஞர் திட்டம் (17-35 வயது) சுய மேம்பாடு திட்டம் (18-55 வயது) மொத்தம்: 130.000 Gur 280.000 பேர் : 420.000 பேர் 2018ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை ஆற்றல் மிகு தொழிலாளர் வளத்தை உருவாக்குவதற்கு 230 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

Gas Pipe Fitter, Wireman Single Phase, Air-conditioning & Mechanical Ventilation, Scaffold Erection Plant ஆகிய துறைகளுக்கு ஆள்பலத் தேவை மிக அதிகமாக இருக்கிறது. திவெட் கல்வி மூலம் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டுக்கும் அதிகமான திறன்மிக்க தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மடானி மக்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதற்கு இந்த 2 அமைப்புகளும் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

ஒரு குடும்பம் அதன் பொருளாதாரம் மேன்மை பெறுவதற்கு திவெட் கல்வி இன்று அதன் கதவுகளைத் திறந்திருக்கிறது.

மலேசியாவில் திவெட் சார்ந்த 12 அமைச்சுகள் உள்ளன. இவற்றின்திவெட் பயிற்சி மையங்கள் நாடு முழுதும் செயல்படுகின்றன. அரசாங்கம் உள்நாடு, அனைத்துலக. தனியார் தரப்புகள் திவெட் கல்வித்துறையில் கூட்டு முதலீட்டைக் கொண்டிருப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.

மலேசியாவின் எதிர்காலச் சந்ததியினருக்கு திவெட் மிகப் பெரிய கல்விப் பாதையாகத் திகழ்கிறது. திவெட் சான்றிதழ். டிப்ளோமா. பட்டப் படிப்பை வழங்குகின்றது. இதில் இந்தப் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு உயர் சம்பளம் காத்திருக்கிறது. இன்று உலகளாவிய அளவில் வேலைச் சந்தைகளில் ஈடுருவுவதற்கு உயர் அறிவையும் மிகச்சிறந்த தொழில்திறனையும் கொண்டிருப்பதற்கு இளைய சமுதாயம் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

மலேசிய உயர்கல்வி அமைச்சும் திவெட்கல்வியில் மிகுந்த நாட்டத்துடன் செயல்பட்டு வருகின்றது. திவெட்கல்வியின் அவசியம் இப்போது அனைத்துத் துறைகளிலும் கல்வியிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. உங்கள் வேலை வாய்ப்புகளுக்கு CIDB- ஐத் தொடர்பு கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here