“நாமிருவர் நமக்கொருவர்” என்கின்றனர் ஆஸ்திரேலியாவின் இரட்டை சகோதரிகள்.

பேர்த், ஆஸ்திரேலியா (ஜூன் 16): ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தை சேர்ந்த இரட்டை சகேளான அனா(Anna) மற்றும் லூசி(Lucy), இருவரும் ஒரே இளைஞரை திருமணம் செய்யவுள்ள சம்பவம் பரவலாக பேசப்பட்டுட்டு வருகின்றது.

32 வயதான இவ் இரட்டை சகோதரிகள் ஏற்கனவே பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைக்கு $200,000 ஆஸ்திரேலிய டாலர்கள் செலவழித்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது, ​​இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து கொண்டிருக்கும் பென் பைர்னை (37) என்பவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறுகிறார்கள்.

“நாம் இரட்டையர்களாக இருப்பதாலும் எங்கள் இருவரது உடல் அமைப்பு ஒரே மாதிரி இருப்பதாலும் நாம் இருவருமே ஒரே மாதிரியான உடல் மற்றும் உள ரீதியான அனுபவங்களை பெற விரும்புகின்றோம்” என்றும் கூறுகின்றனர்.

மேலும் தாங்கள் இருவரும் ஒன்றாகவெ கர்ப்பம் தரிக்கவும் விரும்புகிறோம் என்றும் தங்களுக்கு பிடித்தவரை தாங்களுக்குள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பென் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டு ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்வது சட்ட விரோதம்.ஆனால் வெளிநாடுகளில் சாத்தியம். மலேசியா, இந்தோனேஷியா, அமெரிக்காவின் சில பகுதிகளில் இதற்காக சட்டம் உள்ளது என்றும் அங்கு சென்று திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளோம்என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம் என்றும் கூறினார்.

இதேவேளை இவர்கள் மூவரும் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்து வரும் நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியில் சென்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here