கொரோனா இன்னும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்குமாம்!

கொரொனாவுக்கும் அரசியில் தெரிந்திருக்கிறது போலும் . ஐந்து ஆண்டுகள் வரை அதன் ஆட்சி இருக்குமென்று கணிக்கப்பட்டிருக்கிறதே!

தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். ஆனால், கொரோனா 4 ஆண்டுகள் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது ஒப்பீட்டு அளவில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வந்துவிட்டது. முன்பு மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டினர். ஆனால் இப்போது ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வருகின்றனர்.

ஆனால் சுவிட்சர்லாந்தில் நிலைமையே வேறு. அங்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. 35 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்றனர்.

ஆனால் 18 முதல் 34 வயது உடையவர்கள் பலரும் தடுப்பூசியே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் 20 வயதுக்கு உட்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த நிலை மோசமானது என்றும், அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி தடுப்பூசிக்கு தயக்கம் காட்டினார் கொரோனா மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here