சிரித்தால் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதி’-

  புதிய சிரிப்பு தொழில்நுட்பம் அறிமுகம்!

கேனான் நிறுவனம் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, சிரிப்பை ஸ்கேன் செய்யும் ஒரு தொழில்நுட்பத்தை தன்னுடைய ஊழியர்களின் நலன் கருதி அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள உள்ள ‘கேனான்’ தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் ‘சிரிப்பை ஸ்கேன் செய்யும்’ கேமரா அறிமுகமாகியுள்ளது.

அலுவலகத்துக்குள் நுழையும்போது ஊழியர்கள் தங்களது சிரித்த முகத்தை காண்பித்தால் மட்டுமே அது உள்ளே நுழைய அனுமதிக்கும்.

ஒவ்வொரு பணியாளரும் பணி நேரத்தில் 100 சதவீதம் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய விரும்பும் நோக்கில் இதனை அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தைவிட இது மிகக் குறைவான ஆபத்தையேக் கொண்டது என்றும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here