கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நியூசிலாந்து பிரதமர்

எப்போதுமே தலைவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மக்களும் சட்டங்கலை மதிப்பார்கள். பின்னர் அதன் வழி நடப்பார்கள். 

பல தலைவர்கள் அப்படி இல்லை. வெறும் விளம்பரத்திற்காகச் செய்கின்றவர்களாகவே இருப்பதை பார்க்க முடியும்!

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். உண்மையிலேயே மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் இவருடைய எண்ணம்.

உலக நாடுகள் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நியூசிலாந்து நாட்டில் அமெரிக்காவில் தயாரிக்கும் பைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.

தற்போது நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக்கொண்டுள்ளார். மேலும், மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். இதுவரை அந்நாட்டில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here