கோவிட்-19 தடுப்பூசி செலுத்தவில்லையா? சிறை என்கிறது பிலிப்பைன்ஸ்.

மணிலா , ( ஜூன் 22) :
கோவிட் தடுப்பூசித் திட்டத்தினை விரைவாகவும் , அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையிலும் உலகின் ஒவ்வொரு நாடும் பல்வேறு விதமான ஊக்குவிப்புகளை செய்து வருகின்றது.

அதற்கமைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே (Rodrigo Duterte ) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ்ஸில் தற்போது வரை 1,030,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை 23,000 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிலிப்பைன்ஸ் 4 கோடி டோஸ் பைசர் தடுப்பூசியை கொள்முதல் செய்துள்ளது. மேலும் அவற்றை பொது மக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுமார் 11 கோடி பேர்  கொண்ட பிலிப்பைன்ஸ் மக்கள் தொகையில், இதுவரை ஏறத்தாழ 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிலிப்பைன்ஸ் அதிபர், ரோட்ரிகோ நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் மக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here