பழைய சலவை இயந்திரம் போதைப்பொருட்களுக்கான மறைவிடமாக மாறியது.

பெட்டாலிங் ஜெயா (ஜூன் 23):

பழைய சலவை இயந்திரத்தில் போதைப்பொருள் மற்றும் RM10,723 மதிப்புள்ள பணத்தை மறைத்து வைத்ததற்காக புக்கிட் துங்கு, பாசீர் மாஸ், கிளந்தானில் உள்ள வீட்டில் நேற்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சோதனையின் போது வீட்டின் எதிரில் நின்ற 27 வயதுடைய ஒருவரையும் கைது செய்ததாக பொது செயல்பாட்டு படை (PGA 7) அதிகாரி அஸ்ஹாரி நுசி தெரிவித்தார்.

அஸ்ஹாரி கூறுகையில், இரு சந்தேக நபர்களையும் உடல் பரிசோதனை செய்தபோது , எந்தவொரு தவறான பொருட்களையும் கண்டுபிடிக்கவில்லை என்றும் கடமையில் இருந்த உறுப்பினர்கள் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் போதைபொருள் உள்ளதா என்று தேடினார்கள்.

“வீட்டிற்கு வெளியே ஆய்வு செய்து கொண்டிருந்த உறுப்பினர்கள் ஒரு பழைய சலவை இயந்திரத்தை கண்டுபிடித்தனர், அதில் RM1,460 ரொக்கம், RM641 மதிப்புள்ள 12.82 கிராம் ஹெரோயின் மற்றும் RM8,622 மதிப்புள்ள 86.22 கிராம் சியாபு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன” என்று அவர் கூறினார்.

மேலும் சந்தேக நபர் வசித்து வந்த அறையில் தங்கி இருந்த 16, 21 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு
அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அத்தோடு ஐந்து சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக பாசீர் மாஸ் மாவட்ட காவல் தலைமையகத்திற்கு (ஐபிடி) கொண்டு செல்லப்பட்டனர் என்றும் கூறினார்.

ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39 பி, 39 ஏ (2), 15 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here