போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தாயாரிடம் கத்தியை காட்டி மிரட்டிய ஆடவருக்கு 7 மாத சிறை

பெட்டாலிங் ஜெயா : தனது தாயை கத்தியால் மிரட்டியதற்காக ஒரு நபருக்கு  மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏழு மாத சிறைத்தண்டனை விதித்தது. 23 வயதான ஆர்.மகேந்திரன் இந்த குற்றச்சாட்டை மாஜிஸ்திரேட் எம்.பரத் முன்பு ஒப்புக் கொண்டார்.

50 வயதான அவரது தாயார் பி.கலைவாணி, மகேந்திரனுக்கு போதை மருந்து வாங்க பணம் கொடுக்க மறுத்ததையடுத்து இந்த குற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 18 ஆம் தேதி இரவு 9 மணிக்கு இங்குள்ள பெலங்கி டாமான்சாரா, பி.ஜே.யூ 6, பெர்சியன் சூரியன் ஆகிய இடங்களில் உள்ள அவர்களது குடியிருப்பில் அவர் குற்றத்தைச் செய்தார். மேலும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இது அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கும் சட்டமாகும். ஜூன் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அவருக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here