கனடாவின் இன்னுமோர் பள்ளியில் 751 அடையாளம் காணப்படாத புதைகுழிகள்!

கனடா, (ஜூன் 25) :
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் பழங்குடி சிறுவர்களுக்கான கத்தோலிக்க வதிவிடப் பள்ளி அமைந்திருந்த பகுதியில் ,751 அடையாளம் காணப்படாத புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பாடசாலையில் மே மாத இறுதியில் புதைகுழியைத் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நூற்றுக்கணக்கான புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பூர்வகுடியைச் சேர்ந்த கொவேசஸ் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் கனடாவின் மிகப்பெரிய பாடசாலையாக விளங்கிய கம்லூப்ஸ் இந்தியன் பாடசாலை விடுதிவளாகத்தில் மூன்று வயது முதல் பல்வேறு வயதுகளில் உள்ள 215 இறந்த சிறுவர்களின்  உடல் எச்சங்கள் (உடல்பாகங்கள்) கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here