இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக இருந்தவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1921- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28- ஆம்தேதி பிறந்தார்.
பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக விளங்கினார். 1991- இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ராவ் பிரதமரானார்.
ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது. தனது 83- ஆம் வயதில் 2004- ஆம் ஆண்டு டிசம்பர் 23- ஆம் தேதி நரசிம்ம ராவ் மாரடைப்பால் காலமானார்.