கோலாலம்பூர் , (ஜூலை 2) :
கற்பூரம் என்றதும் நமக்கு உடனே ஞாபகம் வருவது தீபாராதனை காட்டும் போது பயன்படுத்தும் கற்பூரம்தான். ஆனால் முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பச்சைக்கற்பூரம் வேறு. நாம் தீபாராதனைக்கு பயன்படுத்தும் கற்பூரம் வேறு என்பதுதான். பச்சைக்கற்பூரம் ஒரு வாசனை, மூலிகைப் பொருளாகும். பச்சைக்கற்பூரமும் லவங்கப்பட்டையும் ஒரே குடும்பத்தை சேர்ந்தது.
இந்த பச்சைக்கற்பூரம் ஆசியாவின் தாய்வானில் இருக்கின்ற காடுகளிலுள்ள Cinnamomum camphora என்ற பசுமையான மரத்தின் கட்டையிலிருந்தும் போர்னியோ தீவுகள், சுமத்ரா மற்றும் இந்தோனேசியா போன்ற இடங்களில் உள்ள டிரை ஃபலோனபஸ் அரோமெட்டிக்கா என்கின்ற கட்டையிலிருந்தும் உருவாக்கப்படுகின்றது.
சாதாரணமாக நாம் தீபாராதனைக்கு பயன்படுத்தும் சூடங்கள் தர்பண்டன் எண்ணையிலிருந்து உருவாக்கப்படுகின்றது.
இப்பச்சைக்கற்பூரமானது பழங்காலத்திலிருந்து எமது மூதாதையரால் மருத்துவம், ஆன்மீகம், உணவு என்று எல்லாவிதத்திலும் இதனை பயன்படுத்தி வந்துள்ளனர். பொதுவாக லட்டு, சக்கரைப்பொங்கல் போன்ற இனிப்பு சாப்பாட்டு வகைகளில் கொஞ்சமாக இந்த பச்சைக்கற்பூரத்தை சேர்த்துக்கொள்வார்கள். லட்டில் பச்சைக்கற்பூரம் சேர்ப்பதனாலேயே அது ஒரு வாரம் வரை பூஞ்சனம் (fungus ) பிடிக்காமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இ
அவ்வாறு பயம் கொள்பவர்கள் பச்சைக்கற்பூரத்தை வீட்டில் உள்ள பொதுவான இடத்தில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு போட்டு திறந்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் இக்கற்பூரத்தின் வாசனை காற்றோடு கலந்து, நமது சுவாசத்துடன் சென்று மூச்சுமண்டலத்தை சீர் செய்யும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இது செரிமானத்தை தூண்டும், அன் டி-ஆக்சிஜன் செயல்பாடு, வீக்கத்தை குறைக்கும், நுண்ணுயிரிகளை தடுக்கும், கிருமிநாசினியாகவும் பயன்படுகின்றது.
பெருமாள் கோவில்களில் தீர்த்தம் வாங்கி குடித்திருப்பீர்கள். அதில் தண்ணீர் , துளசி, பச்சைக்கற்பூரம் சேர்க்கப்பட்டிருக்கும். இத்தீர்த்தம் மிகவும் சுவையாக இருக்கும். இத்தீர்த்தம் சுவாசக்கோளாறு , சளி, இருமல் உள்ளவர்களுக்கு பெரும் நிவாரணியாக அமையும்.
இப்பச்சைக்கற்பூரத்தை திருநீற்றிலும் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நெற்றியில் நாம் சாத்தும்போது கிருமிநாசினியாகவும் நேர்மறைசக்தியை ஈர்ப்பதற்கும் ஏதுவாக அமைகின்றது.
இப்பச்சைக்கற்பூரம் ஏன் ஆன்மீகத்தில் முக்கிய பங்குவகிக்கிறது என்றால், இது நேர்மறை சக்தியை இழுக்கும் ஆற்றல் கொண்டது. ஒரு பெரிய பாறையில் பச்சைக்கற்பூரத்தை தடவினால் அப்பாறை உடைய ஆரம்பிக்கும் என்கின்றனர் சான்றோர். பாறையையே பிரிக்கும் சக்கி கொண்ட இக்கற்பூரம் எங்களை சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளை (negative vibration)விரட்டி , நேர்மறை சக்தியை அந்த இடம்முழுதும் கொண்டிருக்கும். எனவே நமது சிந்தனை ,செயல் எல்லாம் வெற்றியை மட்டுமே நமக்கு கொண்டுவந்து சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
செப்பு பாத்திரத்தில் தண்ணீரை இரவில் எடுத்துக்கொள்ளுங்கள் அதனுள் துளசி, கராம்பு,தேன் கலந்த தண்ணீரை காலையில் குடித்தால் அந்த நாளே சுறுசுறுப்பாக இருக்கும் என்கின்றனர் நமது மூதாதையர்கள்.
எனவே, இப்பச்சைக்கற்பூரத்தை உங்கள் வீட்டின் பூஜை அறையில் ஒரு கண்ணாடிப்பாத்திரத்தில் ஒருதுண்டு பச்சைக்கற்பூரம் , 3 ஏலக்காய், 3 கிராம்பு, மஞ்சள், ஜவ்வாது போன்ற நறுமணப்பொருட்களுடன் சேர்த்து வைக்கும் போது வீட்டில் இறை சக்தி நிறைந்திருக்கும்.
இது தனம் ஆகாசனம், பிரபஞ்சத்திலுள்ள நேர்மறைசக்தி ஆகாசனம், இறைசக்தி ஆகாசனம் போன்றவற்றுக்கு இது உதவும். மேலும் வீட்டில் ஏற்றும் தீபத்திலுள்ள எண்ணையில் சிறிதளவு பச்சைக்கற்பூரத்தை போட்டால் அதுவும் வீடு முழுதும் அந்த நறுமணத்தை கொண்டுவருவதுடன் வீட்டுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பச்சைக்கற்பூரத்தை வீட்டில் உள்ள அல்லது கடையிலுள்ள உங்களது பணப்பெட்டியிலும் மஞ்சள் துணியில் கட்டி வைத்தால் செல்வம் பெருகும். மகாலட்சுமிக்கு பிடித்தமான திரவியங்களில் இதுவும் ஒன்று. எனவே செல்வங்களை ஈர்க்கும் சக்தி இப்பச்சைக்கற்பூரத்திற்கு உண்டு. ஆகவே, இதனை பயன்படுத்தி பயனடைவோம்.