சுவிட்சர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதால் பொதுமக்கள் அதை பயன்படுத்துவதற்கு மாநில நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் பெர்ன் மாகாணத்தில் Emmental மாவட்டத்தில் உள்ள Hindelbank , Krauchthal பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இதில் குறிப்பாக Hettiswil , Schleumen, Sagi ஆகிய தொழிற்சாலைப் பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் சமைப்பதற்கும்,குடிப்பதற்கும் இந்த நீரை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாகவே இந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை சீரான பிறகு மக்கள் தொடர்ந்து இந்த நீரை பயன்படுத்திக் கொள்ளலாம் என Krauchthal நகர மேயர் Markus Iseli தெரிவித்துள்ளார்.