பத்தே நிமிடத்தில் பயங்கரம்- 76 ஹாட் டாக்ஸ் காலி

 புதிய சாதனை படைத்த நபர்!

வாஷிங்டன்:

அமெரிக்காவில் நடைபெற்ற உணவு உண்ணும் போட்டி ஒன்றில் பத்தே நிமிடத்தில் 76 ஹாட் டாக்ஸ் வகை உணவை உண்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. சாதனைகள் பலவகை என்ற போதும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பதிவாகி இருக்கும் இந்த சாதனை புதிய வகை எனலாம்.

உலக ஹாட்டாக்ஸ் உணவை சாப்பிடும் போட்டி கோனே தீவுகளில் நடைபெற்றது. இதில் 10 நிமிடத்தில் 76 ஹாட் டாக்ஸ்களை கபளீகரம் செய்த ஜோ செஸ்நெட் என்பவர் தனது முந்தைய  சாதனையை முறியடித்து முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

சாப்பிடுவதில் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை இப்போட்டியில் பெண்களும் நிரூபித்தனர். 10 நிமிடங்களில் 31 ஹாட் டாக்ஸ்கள்  பண்களை வயிற்றுக்குள் தள்ளி Michelle Lesco என்ற பெண் மகளிருக்கான பரிசினை தட்டிச் சென்றார்.

ஆண்கள் பிரிவில் ஹாட் டாக் உண்ணும் போட்டியில் வெற்றி பெற்ற ஜோ கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 70 ஹாட்டாக்ஸ்களை சாப்பிட்டு சாதனை செய்த நிலையில், இம்முறை 76 டாக்ஸ்களை ஜோ சாப்பிட்டு தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here