குழந்தைகள் வடிவில் பொம்மை

 வாங்கிய 60 வயது முதியவர் கைது..

செக்ஸ் டாய்ஸ் என்று அறியப்படும் கலவிக்கான பாலியல் பொம்மைகளை இணையம் மூலமாக இறக்குமதி செய்த 60 வயது நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவீன காலகட்டங்களில் பல விஷயங்களுக்கு இயந்திரங்கள் மனிதர்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், பாலியல் ரீதியான விஷயங்களுக்கும் வெளிநாடுகளில் இயந்திரங்கள் உள்ளன.

இவைகளில் மனிதர்களை போன்ற உடல் அமைப்பை கொண்ட செக்ஸ் டாய்ஸ் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், இது போன்ற செக்ஸ் டாய்ஸ் விற்பனை விஷயத்தில், சிறார்களின் பாலியல் பொம்மைகளுக்கு பல நாடுகள் தடை விதித்திருக்கிறது.

மேலும், சிறார்கள் தொடர்பான பாலியல் பொம்மைகளை வாங்கும் நபர்களை கைது செய்து, அவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்தும் வருகிறது. இந்நிலையில், 60 வயது நபர் சிறுமி உருவத்தில் இருக்கும் செக்ஸ் டாய்ஸை வாங்கியதால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் உள்ள நியூகாஸ்ட்டில் (Newcastle) அருகேயுள்ள வடக்கு அம்ப்ரியாலான்ட் (North Umbria) பகுதியைச் சார்ந்த 60 வயது napar மால்காம் எங் (Malcolm Young). இவர் 3 அடி உயரத்தில் உள்ள தட்டையான மார்புகள் போன்ற அமைப்பை பெற்ற குழந்தை வடிவிலான பாலியல் பொம்மைகளை வாங்கியதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்  வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், அவரது வீட்டில் குழந்தை வடிவிலான பாலியல் பொம்மைகள் இருந்தது உறுதியான நிலையில், அவரது மடிக்கணினி  அலைபேசி போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.

அதிலும், சிறுமிகளின் ஆபாச படங்கள் நிறைந்துள்ளன. பல நீக்கப்பட்டு இருந்தது. இதனை தொழில்நுட்பம் மூலமாக காவல் துறையினர் மீட்டெடுத்து குற்றத்தை உறுதி செய்தனர்.

மால்காம் எங் கடந்த 2017 ஆம் வருடமே சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகள் தொடர்பான பாலியல் பொம்மைகளை வாங்க இருந்த நிலையில், காவல் துறையினர் முன்னதாகவே கண்டறிந்து அவரை எச்சரித்து அபராத தண்டனையுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், மீண்டும் அவர் குழந்தைகள் உடலைப் போல உள்ள பாலியல் பொம்மையை வாங்கியதால், சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி தண்டனைக்காலம் நியூகாஸ்ட்டில் நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் என வடக்கு அம்ப்ரியா காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here