இந்தியாவின் சுகாதார அமைச்சர் உட்பட 12 அமைச்சர்கள் ஒரேநேரத்தில் ராஜினாமா!

புதுடெல்லி, ஜூலை 8:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட் -19 தொற்றுக்கள் இந்தியாவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய சுகாதார அமைச்சர் உட்பட 12 அமைச்சர்கள் நேற்று (ஜூலை 7) தமது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து, தமது ராஜினாமா கடிதங்களை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், 12 மத்திய அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டதாக, குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

66 வயதான சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோவிட் -19 நோய்த்தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து சுகாதார அமைச்சருக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்துக்கொண்டே வந்தது.

சில வாரங்களுக்கு முன்னர், வைரஸின் புதிய மாறுபாடு, பொருளாதாரத் தடைகளின் பலவீனம் மற்றும் ஒரு தொற்றுநோயின் இறுதி கட்டத்தில் இருக்கும் இந்தியாவின் நிலைமை குறித்த அவரது கருத்துக்களைத் தொடர்ந்து அவர் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படுக்கைகள், மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் இல்லாத மருத்துவமனைகளில் சுகாதார சேவைகள் பல பகுதிகளில் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களாக, இளம் எம்.பி.,க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் உள்ளிட்டோருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here